திருவள்ளூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 193 பேருக்கு நகை கடன் தள்ளுபடி
திருவள்ளூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 193 பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நகை கடன் தள்ளுபடி
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 பவுனுக்கு உட்பட்டு நகை கடன் பெற்று இருந்த பயனாளிகள் நகைகளை சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அதன் கிளைகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் போன்ற நிறுவனங்களில் 23 ஆயிரத்து 193 பயனாளிகளுக்கு ரூபாய் 107.71 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகள்
ஆகவே தகுதியான பயனாளிகள் தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளை நேரில் அணுகி கடன் தள்ளுபடி திட்டத்தின்படி பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story