பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதிஉலா


பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதிஉலா
x
தினத்தந்தி 24 March 2022 8:33 PM IST (Updated: 24 March 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா விடிய, விடிய நடந்தது.

நத்தம்:

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா, கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூப்பல்லக்கு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.

 இதையொட்டி அம்மன் குளம் பகுதியில் மல்லிகை, முல்லை, ரோஜா, சம்மங்கி, துளசி, அரளி, கனகாம்பரம், செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வண்ண பூக்களால் பல்லக்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார்.

பின்னர் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், வாண வேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 15-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் மாரியம்மன் பூப்பல்லக்கில் விடிய, விடிய எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

நேற்று காலை அம்மன் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார். அப்போது மூலவருக்கும், உற்சவருக்கும், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இந்த விழாவில் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story