டிரான்ஸ்பார்மர் வெடித்து இறந்த தந்தை-மகள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; சட்டசபையில் மந்திரி சுனில்குமார் தகவல்


டிரான்ஸ்பார்மர் வெடித்து இறந்த தந்தை-மகள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; சட்டசபையில் மந்திரி சுனில்குமார் தகவல்
x
தினத்தந்தி 24 March 2022 9:01 PM IST (Updated: 24 March 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் தீக்காயம் அடைந்து உயிரிழந்த தந்தை-மகளின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டசபையில் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

மானிய கோரிக்கை

  கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அந்த பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. பின்னர் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 15-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு பூஜ்ஜிய நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அந்த பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ்குமார், பெங்களூருவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தந்தை-மகள் இறந்த சம்பவம் குறித்து பிரச்சினை கிளப்பினார். அதற்கு மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:-

ரூ.20 லட்சம் நிவாரணம்

  பெங்களூரு ஞானபாரதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) வெடித்து சிதறியதில் அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற தந்தை-மகள் இறந்துள்ளனர். அவர்களின் 2 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வீதம் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மின்மாற்றி வெடித்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

  மேலும் பெங்களூருவில் நடைபாதைகள் மற்றும் மோசமான நிலையில் மின்மாற்றிகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கையாக வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மோசமான நிலையில் உள்ள மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் நாட்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு சுனில்குமார் கூறினார்.

Next Story