மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு வலைவீச்சு
மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாகூர், மார்ச்.24-
கிருமாம்பாக்கம் பிள்ளையார்கோவில் வீதியைச் சேர்ந்தவர் பரிதாபி (வயது 48). இவரது மனைவி அனுசு (38). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பிள்ளையார்குப்பம் முருகன் கோவில் திருவிழாவுக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர். அங்கு அனுசுவின் முதல் கணவரின் மகன் தேர் இழுத்துள்ளார். அதற்கு அனுசு உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனை பரிதாபி கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் வீடு திரும்பியதும், கணவன் மனைவிக்கு கோவிலில் நடந்த சம்பவம் குறித்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரிதாபி, அங்கிருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கையில் அனுசுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி யோடிய பரிதாபியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story