பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தவறு செய்தாலும் நடவடிக்கை; மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை


பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தவறு செய்தாலும் நடவடிக்கை; மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 March 2022 9:10 PM IST (Updated: 24 March 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி அரக ஞானேந்திரா எச்சரித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.பி.திம்மாப்பூர் கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளிக்கையில் கூறியதாவது:-

  நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. பிறருக்கு அவர்களின் பதவிக்கு ஏற்பவும், சிலருக்கு மிரட்டல் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-மந்திரியின் வீடு அருகே போதைப்பொருள் விற்ற போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் சில தனிநபர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதனால் வெறும் அலங்காரத்திற்காக தனிநபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் எழுத்து மூலமாக கடிதம் வழங்கினால் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.க்கு மிரட்டல் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

Next Story