டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது


டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2022 9:51 PM IST (Updated: 24 March 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள தீத்தாண்டப்பட்டு அருகே உள்ள பாரியூர் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 25), டிரைவர். 

நேற்று முன்தினம் நள்ளிரவில் வேடியப்பன் செங்கத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். 
வளையாம்பட்டு கிராமத்தை கடந்து சென்ற போது சிலர் வேடியப்பனை வழிமறித்து அவரை மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், சப்-இன்ஸ்பெக்டர் யேசுராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த வல்லரசு (20) மற்றும் சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story