மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
தமிழகத்தில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50-ம், பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50-ம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நூதன போராட்டம் நடந்தது. இதற்கு. மாநகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூதன போராட்டம்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி இழுத்தனர். மேலும் ஒரு மொபட்டில் கியாஸ் சிலிண்டரை கட்டி எடுத்து வந்து இருந்தார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் கிருஷ்ணன், நாகராஜன், பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story