கூடலூரில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர்கள் உண்ணாவிரதம்
கூடலூரில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி கூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்
கூடலூர் 2-வது மைல் பகுதியில் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர் உட்பட 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாக குழு தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக உறுப்பினர்கள் 7 பேர் புகார் தெரிவித்ததுடன், நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சாலை முன்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் 7 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, கூட்டுறவு நிர்வாக குழு தலைவருக்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லை. எனவே உடனடியாக அவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story