டீசலில் இயங்கும் நீராவி என்ஜின் மூலம் 174 பயணிகளுடன் குன்னூருக்கு வந்த மலை ரெயில்
மேட்டுப்பாளையத்தில் இருந்து டீசலில் இயங்கும் நீராவி என்ஜின் மூலம் 174 பயணிகளுடன் குன்னூருக்கு 15 நிமிடத்துக்கு முன்கூட்டிேய மலை ரெயில் வந்து சேர்ந்தது.
குன்னூர்
மேட்டுப்பாளையத்தில் இருந்து டீசலில் இயங்கும் நீராவி என்ஜின் மூலம் 174 பயணிகளுடன் குன்னூருக்கு 15 நிமிடத்துக்கு முன்கூட்டிேய மலை ரெயில் வந்து சேர்ந்தது.
டீசலில் இயங்கும் நீராவி என்ஜின்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை மாவட்டமான நீலகிரிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதி வழியாக மலை ரெயில் செல்வதால் பாறைகளை குடைந்து தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு பல் சக்கரம் பொறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே இதற்காக நீராவி என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இயங்க பர்னஸ் ஆயில் இயக்கப்பட்டதால் புகை அதிகமாக வந்தது.
இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. எனவே நீராவி என்ஜின் இயக்க பர்னல் ஆயிலுக்கு பதிலாக டீசல் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு தகுந்தவாறு என்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
174 பயணிகளுடன் குன்னூர் வந்தது
பின்னர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அது வெற்றியாக முடிந்தது. இந்த நிலையில் இந்த ரெயில் என்ஜின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப் பட்டது. அதன்படி நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து டீசலில் இயங்கும் நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. அதில் 174 பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் ஊட்டியை நோக்கி புறப்பட்டு சென்றது. பின்னர் அது காலை சரியாக 10 மணிக்கு குன்னூர் ரெயில் நிலையத்தை அடைந்தது.
அங்கு ரெயிலுக்கு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து நீராவி என்ஜின் மாற்றப்பட்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அங்கிருந்து ஊட்டி புறப்பட்டு சென்றது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
முன்கூட்டியே வந்தது
பர்னஸ் ஆயில் மூலம் இயங்கப்பட்ட நீராவி என்ஜின் மலை ரெயில் காலை 10.15 மணி முதல் 10.30 மணிக்குதான் குன்னூருக்கு வந்தடையும். ஆனால் டீசல் மூலம் இயக்கப்பட்ட நீராவி என்ஜின் கொண்ட மலை ரெயில் 15 நிமிடம் முன்கூட்டியே 10 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தது. இதனால் நேரம் மிச்சமாகி உள்ளது.
கோடை சீசன் தொடங்க உள்ளதால் பலர் ஊட்டி வந்து செல்கிறார்கள். எனவே பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரெயில் இயக்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story