மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன்


மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 24 March 2022 10:29 PM IST (Updated: 24 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போனை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு 6 காது கேளாத மற்றும் 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11 ஆயிரம் மதிப்பிலான  ஸ்மார்ட் போன் வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்கு மேற்பட்ட பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்க நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியுடைய 341 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல்கட்டமாக தற்போது 10 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் காது கேளாதவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வரும்போது சைகை மொழியில் பரிமாற்றம் செய்வதற்கும்,  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு ஒலி வடிவில் பரிமாற்றம் செய்வதற்கும் பிரத்யேகமான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.  நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, செவித்திறன் குறைவுடையோர்களுக்கான சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

Next Story