மண்வளம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


மண்வளம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 24 March 2022 10:32 PM IST (Updated: 24 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே மண்வளம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள பொறையூர் கிராமத்தில் தேசிய நீடித்த வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் மண்வள அட்டை மற்றும் மண் வளம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மலையரசன், வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தினகரன் கலந்து கொண்டு மண் வளத்தை பாதுகாப்பது, பயிர்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகள் குறித்தும் பேராசிரியர் ஜான்சன் தங்கராஜ் எட்வர்ட் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு கட்டுப்பாடு குறித்தும், பேராசிரியர் அய்யாதுரை உழவியல் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து 100 விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. அப்போது உதவி வேளாண் அலுவலர் இளையராஜா, பயிர் அறுவடை அலுவலர்கள் முருகன், சதீஷ்குமார் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story