தொடர் விபத்தை தடுக்க நடவடிக்கை
விக்கிரவாண்டி பகுதியில் தொடர் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி பகுதியில் தொடர் விபத்துகளும், உயிர் பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி எதிரிலும், முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை சர்வீஸ் ரோடு பிரியும் இடத்திலும், விக்கிரவாண்டி தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலை முனைகளிலும், சித்தணியிலும் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இந்த பகுதிகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டார்.
பின்னர் அவர், விபத்துகளை தடுக்க 700 மீட்டர் தொலைவில் பாரிகார்டுகளை வைக்க வேண்டும், விபத்து நிகழும் பகுதியில் வேகமாக வருகின்ற வாகனங்களின் வேகத்தை குறைத்து டிரைவர்கள் முழு கவனத்துடன் விபத்து பகுதியை கடந்து செல்ல போக்குவரத்து போலீசார் உதவ வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேல் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story