சுயம்வர பார்வதி ஹோமம்
கள்ளக்குறிச்சியில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை சார்பாக திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலருக்கும் திருமணத்தடையை நீக்கும் விதமாக சுயம்வர பார்வதி ஹோமம் ஆராய்ச்சியாளர் சி.பொதுவுடைமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருமணமாகாத ஆண், பெண்களின் பெயர், நட்சத்திரம் பதிவு செய்யப்பட்டு சுயம்வர பார்வதி மந்திரம் உச்சாடனம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்வதி சிலைக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமலை கேசவன், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story