ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?


ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
x

காத்திருப்பு-தேத்தாக்குடி சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவெண்காடு:
காத்திருப்பு-தேத்தாக்குடி சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான மின்கம்பம்
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தேத்தாக்குடி செல்லும் சாலையில், ஒரு மின் கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பலர் நடந்து சென்று வருகின்றனர்.  இந்த மின்கம்பம் எப்போது சாய்ந்து விழுமோ? என்ற அச்சத்துடேனே வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்டதுறை  அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story