அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 24 March 2022 10:45 PM IST (Updated: 24 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

விழுப்புரம், 

மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் வைடப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகர பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.
மேலும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகள், கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித்திட்டம், இருளர், பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை வைடப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Next Story