காரிமங்கலத்தில் தலைமை எழுத்தர் மீது தாக்குதல் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு

காரிமங்கலத்தில் தலைமை எழுத்தர் மீது தாக்குதல் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 March 2022 10:45 PM IST (Updated: 24 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலத்தில் தலைமை எழுத்தர் மீது தாக்குதல் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு

காரிமங்கலம்:
காரிமங்கலம் பேரூராட்சியில் புளியமரம் மற்றும் ஏரிகள் ஏலம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏலம் கேட்பவர்கள் அதற்குரிய தொகையை டி.டி.யாக தலைமை எழுத்தர் சந்தோஷ் என்பவரிடம் வழங்கினர். அ.தி.மு.க. பிரமுகர் பாரதி ரூ.30 ஆயிரம் ஏலத்தொகைக்கு டி.டி. வழங்கினார். மதியம் ஏலம் நடப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பாரதி தான் வழங்கிய டி.டி.யை வேறு பெயருக்கு மாற்ற வேண்டும் என கூறினார்.
அதற்கு தலைமை எழுத்தர் மறுக்கவே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் தலைமை எழுத்தர் சந்தோஷ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பாரதி, அவரது சகோதரர் பாக்யராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story