இண்டூர் அருகே இரும்பு கம்பியால் பெண் அடித்துக்கொலை கணவருக்கு போலீசார் வலைவீச்சு


இண்டூர் அருகே இரும்பு கம்பியால் பெண் அடித்துக்கொலை கணவருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 March 2022 10:46 PM IST (Updated: 24 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

இண்டூர் அருகே இரும்பு கம்பியால் பெண் அடித்துக்கொலை கணவருக்கு போலீசார் வலைவீச்சு

பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே பெண்ணை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல் உடைக்கும் தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் மயில்முருகன் (வயது 38). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கும், இண்டூர் அருகே உள்ள கும்பலப்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயா (35) என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 
பாளையம்புதூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக கும்பலப்பாடியில் உள்ள விஜயாவின் தாயார் வீட்டில் வசித்து வந்தனர். அங்கு கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
வாக்குவாதம்
இந்த நிலையில் நேற்று மதியம் விஜயா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மயில்முருகன், மனைவி விஜயாவிடம் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மயில்முருகன் இரும்பு கம்பியால் விஜயாவின் தலை மற்றும் கழுத்தில் அடித்தார். 
இதில் படுகாயம் அடைந்து வலியால் அலறி துடித்த விஜயாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மயில்முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவர்கள் உயிருக்கு போராடிய விஜயாவை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரபரப்பு
இதுகுறித்து இண்டூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மயில்முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். தகராறில் மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story