வாடகை செலுத்தாதால் 17 கடைகளுக்கு சீல்


வாடகை செலுத்தாதால் 17 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 24 March 2022 10:48 PM IST (Updated: 24 March 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு வாடகை செலுத்தாதால் 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 304 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.  இதில் பஸ் நிலையத்தில் உள்ள 11 கடைகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள 6 கடைகள் ரூ.93 லட்சம்  வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால் கடைகளை சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நகராட்சி ஆணையர் குமரன் தலைமையிலான பணியாளர்கள் நேற்று 17 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

Next Story