விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் தனியார் பஸ் ஜப்தி


விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் தனியார் பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 24 March 2022 10:51 PM IST (Updated: 24 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் தனியார் பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

செஞ்சி, 

திருவண்ணாமலை மாவட்டம் வெடால் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(வயது 52). இவர் கடந்த 13.7.2013 அன்று வெடாலில் இருந்து செஞ்சிக்கு வந்த தனியார் பஸ்சில் பயணம் செய்தார். பென்னகர் அருகே வந்த போது டயர் வெடித்து பஸ் விவத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மனோகர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் அவர், நஷ்டஈடு கேட்டு வக்கீல் கதிரவன் மூலம் செஞ்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.4 லட்சத்து 29 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் அந்த பஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி நளினகுமார், அந்த தனியார் பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி செஞ்சி சார்பு நீதிமன்ற அமீனாக்கள் சுமதி, மீரா ஆகியோர் செஞ்சி பஸ் நிலையத்திற்கு வந்த அந்த தனியார் பஸ்சை ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர். விபத்து நிகழ்ந்தபோது தனியார் பஸ்சுக்கு இன்சூரன்ஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story