ரூ.6 கோடியில் நவீன பஸ் நிலைய பணி
ரூ.6 கோடியில் நவீன பஸ் நிலைய பணியை அதிகாாிகளுடன் பேருராட்சி தலைவா் ஆய்வு செய்தாா்.
செஞ்சி,
செஞ்சி பஸ் நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் அதனை நவீனப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்பில் நவீன பஸ் நிலையமாக மாற்ற டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதாவது இடது புறத்தில் உள்ள பழைய கடைகளை அகற்றிவிட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளது. மேலும் மழைக்காலத்தில் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் குறித்து மாவட்ட நகர் ஊரமைப்பு துறை அலுவலர் ராஜா மான்சிங், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது செயல் அலுவலர் ராமலிங்கம், துணை தலைவர் ராஜலட்சுமி, செயல் மணி, கவுன்சிலர்கள் சங்கர், ஜான் பாஷா, உதவி பொறியாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் சோமு, பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story