ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 11:01 PM IST (Updated: 24 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம், 
இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ராமேசுவரம் மீன்பிடி டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், எமரிட், சகாயம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பட்டு வரும் இலங்கை மக்களுக்காக மத்திய அரசு ரூ. 7,500 கோடி கடன் வழங்கியதை ஒட்டுமொத்த மீனவர்களும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 2 படகுகள் மற்றும் 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்களை படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் பஸ்நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒரு நாள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story