திடீர் சூறாவளி காற்றால் பல அடி உயரத்துக்கு பறந்த மீன்பிடி வலைகள்
கோடியக்கரை கடற்கரையில் திடீர் சூறாவளி காற்றால் பல அடி உயரத்துக்கு மீன்பிடி வலைகள் பறந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேதாரண்யம்:
கோடியக்கரை கடற்கரையில் திடீர் சூறாவளி காற்றால் பல அடி உயரத்துக்கு மீன்பிடி வலைகள் பறந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திடீர் சூறாவளி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடலில் நேற்று காலை திடீரென நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்று கடலில் இருந்து கரையை நோக்கி சுழன்றடித்து வந்தது.
அப்போது கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலைகளை சுமார் 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசியது. மேலும் கடற்கரையில் இருந்த கொட்டகையின் கீற்றுகள் சூறாவளி காற்றில் பறந்தன.
மீனவர்கள் அச்சம்
இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 5 நிமிடம் வீசிய சூறாவளி காற்றால் கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூறாவளி காற்றை ஒரு சில மீனவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story