11 பவுன் நகை, செல்போன் திருடிய பிரபல கொள்ளையன் கைது


11 பவுன் நகை, செல்போன் திருடிய பிரபல கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 24 March 2022 11:14 PM IST (Updated: 24 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே 11 பவுன் நகை, செல்போனை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் அருகே 11 பவுன் நகை, செல்போனை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 
 11 பவுன் நகை திருட்டு
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வடக்கு கன்னக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெபஸ்தியான், கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி அனித்சுகி (வயது 40). சம்பவத்தன்று இரவு இவர், வீட்டில் தனது 11 பவுன் சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது நகையும், செல்போனும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. யாரோ நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. 
பின்னர், இதுகுறித்து அனித்சுகி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரபல கொள்ளையன் கைது
 விசாரணையில் இரணியல் அருகே பேயன்குழி தாணிவிளையை சேர்ந்த கணபதி மகன் மகாராஜன் (28) என்பவர் அனித்சுகியின் வீட்டு ஜன்னல் வழியாக நகை மற்றும் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து போலீசார் நேற்று காலை மகாராஜனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 11 பவுன் நகை மற்றும் செல்போனையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட மகாராஜன் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டதும், இவர் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும், வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story