தினத்தந்தி புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறை தொடர்பான செய்தி வருமாறு:-
ஆபத்தான பள்ளம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் இரட்டைகடை கடைத்தெருவில் வேதாரண்யம் நெடுஞ்சாலைசந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு சாலையின் நடுேவ மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். பள்ளி செல்லும், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார்,தாணிக்கோட்டகம்.
Related Tags :
Next Story