ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு
சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டி, ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரக்கோணம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரெயில் நிலையம் வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில் பயணிகளுக்கு கிருமி நாசினி, முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின் பற்றுதல் மற்றும் பயணிகள், மாணவர்கள் ஓடும் ரெயில் ஏறுவது, இறங்குவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகுமார் மற்றும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story