வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
நீடாமங்கலத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
நீடாமங்கலம்:
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சுற்றுச்சூழல் அமைப்பின் சேவைகளை அறிந்து பயிற்சி பெற நீடாமங்கலம் வந்தனர். நீடாமங்கலம் காசி விஸ்வநாதர்கோவில் வளாகத்தில் உள்ள 12-வது குறுங்காடு மற்றும் சந்தானராமசாமி கோவில் வளாகத்தில் உள்ள 3-வது குறுங்காட்டில் பயிற்சி பெற்றனர். அமைப்பின் நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். மாணவிகள் கூறுகையில், குறுகிய இடத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை பார்த்தோம். இதனால் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்றனர். 5 நாள் பயிற்சி முடிந்ததும், வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என்று சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story