கண்ணகி கோவில் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்


கண்ணகி கோவில் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 11:41 PM IST (Updated: 24 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவில் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது.

உத்தமபாளையம்: 

தமிழக-கேரள எல்லையான வண்ணாத்தி பாறை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால், இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை தாங்கினார். உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, தாசில்தார்கள் அர்சுணன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், மங்கலதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் கடந்த 2019-ம் ஆண்டைபோல் தமிழக-கேரள மாநில அதிகாரிகளின் கூட்டம் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் நடத்த வேண்டும். கண்ணகி கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும். விழாவின்போது, மாலை 3 மணி வரை பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Next Story