ரூ.1 கோடியே 9 லட்சம் உண்டியல் காணிக்கை


ரூ.1 கோடியே 9 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 24 March 2022 11:45 PM IST (Updated: 24 March 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 9 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.

ராமேசுவரம், 
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இரவு வரையிலும் இந்த பணி நடை பெற்றது. கோவிலின் இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் மடப்புரம் கோவில் உதவி ஆணையர் செல்வி, திருவாடானை கோவில் ஆய்வாளர் சண்முகசுந்தரம், தக்கார் பிரதிநிதி வீரசேகரன், கோவில் மேலாளர் சீனிவாசன், பேஷ்கார்கள் கமலநாதன், ராமநாதன், முனியசாமி உள்ளிட்ட திருக் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து373 ரொக்கம், தங்கம் 90 கிராம் 500 மில்லி, வெள்ளி 3 கிலோ 500 கிராம் இருந்ததாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story