கறம்பக்குடி அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை


கறம்பக்குடி அருகே  விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2022 12:02 AM IST (Updated: 25 March 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் புதுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்தா (வயது 38). ஆடு வியாபாரி. இவரது மனைவி சைலாபானு. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். செல்லத்தாவுக்கு சிறுநீரகம் செயல் இழந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி செல்லத்தா இன்று இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story