தேவகோட்டை நகராட்சியில் தூய்மை பணி


தேவகோட்டை நகராட்சியில் தூய்மை பணி
x
தினத்தந்தி 25 March 2022 12:07 AM IST (Updated: 25 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை நகராட்சியில் தூய்மை பணி நடந்து வருகிறது.

காரைக்குடி, 
தேவகோட்டை நகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் புதிய நகராட்சி தலைவராக சுந்தரலிங்கம் பதவியேற்றபின் முதல் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர் தேவகோட்டை நகர் பகுதி முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல் நடவடிக்கையாக தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டு பகுதிகளில் தூய்மை பணியை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார். அந்தப் பணியில் முதற்கட்டமாக 3-வது வார்டு பகுதியில் உள்ள வள்ளியப்பா செட்டியார் ஊருணி, தண்ணீர் வரத்து கால்வாயை எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story