நாமகிரிப்பேட்டை அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாமகிரிப்பேட்டை அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மத்துருட்டு, வேப்பிலைகுட்டை ஆகிய பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதையடுத்து நேற்று நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அரசு புறம்போக்கு நிலம் 35 ஏக்கர் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story