பரமத்திவேலூர் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). லாரி டிரைவர். இவருடைய மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு நிஷாலி என்ற மகளும், லக்ஷன் என்ற மகனும் உள்ளனர். சதீஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யா கணவருடன் கோபித்து கொண்டு, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதில் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story