மங்களபுரம் அருகே 5 ஆடுகள் திடீர் சாவு; விஷம் வைத்து கொன்றதாக புகார்
மங்களபுரம் அருகே 5 ஆடுகள் திடீரென செத்தன.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் அருகே உள்ள வேப்பிலைகுட்டையை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 32). விவசாயி. ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவருடைய ஆடுகள் விவசாய நிலம் ஒன்றில் அடிக்கடி மேய்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவருடைய 5 ஆடுகள் திடீரென மர்மமாக செத்தன. இதுகுறித்து மாதேஷ் மங்களபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் விவசாயி ஒருவர் தனது ஆட்டுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story