மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
ஆம்பூரில் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா பாடம் நடத்தினார்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு மற்றும் ஆரோக்கியமான ஆண், பெண் குழந்தைகள் கண்டறிதல் ஆகிய நிகழ்ச்சிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பின்னர் சான்றோர்குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கலெக்டர் நடத்தினார்.
அப்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் பழனி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story