செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை


செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2022 12:23 AM IST (Updated: 25 March 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (வயது 32). மினிலாரி டிரைவரான இவரும் முதுநகர் சோவ படையாச்சி தெருவை சேர்ந்த அஞ்சுகம்(28) என்பவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 
இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 
அஞ்சுகம் கடலூர் முதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு உடல் நலம் பாதிப்புக்குள்ளான சதீஷ்குமார் கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 
அதன்பிறகு அஞ்சுகம் தனது கணவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் குடும்பத்தை தான் கவனித்து கொள்வதாகவும் கூறியிருந்தார். 
இதை மீறி சதீஷ்குமார் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த அஞ்சுகம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story