இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓ.என்.ஜி.சி. குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடியில் ஓ.என்.ஜி.சி.கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக குழாய்கள் பதிப்பதற்காக குழாய்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு புதிதாக குழாய்கள் பொருத்தக் கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஓ.என்.ஜி.சி.வெளி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .ஆர்ப்பாட்டத்திற்கு நீடாமங்கலம் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் டேவிட் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிதாக ஓ.என்.ஜி.சி.குழாய்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதில் மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் ஞானமோகன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் மீது கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story