மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 25 March 2022 12:38 AM IST (Updated: 25 March 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.

வலங்கைமான்:
பாபநாசத்தை அடுத்துள்ள ஒன்பத்துவேலி கிராமத்தை சேர்ந்தவர் அழகையன் (வயது 50). விவசாய தொழிலாளி இவர், வயல் பகுதியில் உழவு பணியை முடித்துவிட்டு, உழவு எந்திரத்தை (பவர்டில்லர்) வலங்கைமான் அருகே மதகரம் கிராம மெயின் ரோட்டில் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலியமங்கலம் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் திடீரென்று அழகையன் மீது மோதியது. இந்த விபத்தில் அழகையன் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த பண்டாரவடை பகுதியை சேர்ந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அழகையன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story