மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்


மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 25 March 2022 12:40 AM IST (Updated: 25 March 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

காட்பாடியை அடுத்த வசந்தபுரத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதையொட்டி மாடுகள் ஓடும் வீதியின் இருபுறமும் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஓடுபாதையில் மண்கொட்டி காளைகள் ஓடுவதற்கு தயார் செய்யப்பட்டிருந்தது. 

கால்நடை மருத்துவர்கள் விழாவுக்கு அழைத்து வரப்பட்ட அனைத்து காளைகளையும் பரிசோதனை செய்தனர். அதன் பின்னரே அந்த காளைகள் விழாவில் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. 
விழாவை காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவை இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. வீதியின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள், பொதுமக்கள் கைகளை தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். 

காளைகள் முட்டியதில் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story