உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி


உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 25 March 2022 12:47 AM IST (Updated: 25 March 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர், 
உலக காசநோய் தினத்தையொட்டி கரூரில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தார். இந்தநிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை கரூர் மாவட்டத்தில் காசநோய் பாதிப்பின் அளவிலிருந்து 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. தொடர்ந்து காசநோய் பாதிப்பின் அளவை குறைப்பதற்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் என கூறினார்.
முன்னதாக கரூர் மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், களப்பணியாளர்களுக்கு கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார். மேலும் காசநோய் விழிப்புணர்வு தொடர்பாக அரசு மற்றும் தனியார் ஓவிய ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட காசநோய் விழிப்புணர்வு போட்டியில் முதல் பரிசு பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. 2 மற்றும் 3-ம் பரிசு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஞானகண்பிரேம்நிவாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், துணை இயக்குனர் (காசநோய்) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story