அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 1:07 AM IST (Updated: 25 March 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது.

கரூர், 
கரூர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கவேல் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதுடன், அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், துணை பொது செயலாளருமான செந்தமிழன், தேர்தல் பிரிவு செயலாளர் பார்த்திபன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story