பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு


பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
x
தினத்தந்தி 25 March 2022 1:20 AM IST (Updated: 25 March 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி அருகே கீழக்காடு ெரயில்வே கீழ் பாலத்தை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் ஆய்வு செய்தார்.

பேராவூரணி:
பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு கிராமத்தில் காரைக்குடி- திருவாரூர் அகல ெரயில்பாதை வழித்தடத்தில் ஆளில்லா ெரயில்வே கேட் உள்ளது. தற்போது இதன் அருகே ெரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முறையான வடிவமைப்பு இல்லாததாலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும்  பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் பேராவூரணி அருகே கீழக்காடு ரெயில்வே கீழ்பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆத்தாளூர் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன்  மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கோட்டாட்சியரை சந்தித்து பேசினர். அப்போது இந்த பகுதியில் புதிதாக கீழ்பாலம் அமைக்கப்பட்டால் ஆத்தாளூர் வீரகாளி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவார்கள். மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட கீழ் பாலங்களால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். எனவே இங்கு கீழ் பாலம் அமைக்க கூடாது என வலியுறுத்தினர். 
ஆய்வின்போது தாசில்தார் சுகுமார், தென்னக ெரயில்வே அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story