செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து
அஞ்சுகிராமத்தில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் எரிந்து சேதமடைந்தன.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமத்தில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் எரிந்து சேதமடைந்தன.
செல்போன் கடை
நெல்லை மாவட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் கீதன் (வயது27). இவர் அஞ்சுகிராமம் மேற்கு பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இங்கு புதிய செல்போன்கள் விற்பனையும், பழைய செல்போன்களை பழுது பார்க்கும் பணியும் நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம் போல் கடைைய பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் 6 மணி அளவில் கடையில் இருந்து புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் கடைக்குள் தீ எரிய தொடங்கியது.
பொருட்கள் எரிந்து நாசம்
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கீதனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் போலீசுக்கும், கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய புதிய செல்போன்களும், பழுது நீக்க வைத்திருந்த ஏராளமான பழைய செல்போன்களும், கண்காணிப்பு கேமரா உள்பட கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
போலீசார் விசாரணை
இந்தவிபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தினர். கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த ேபாது செல்போன் சர்வீஸ் செய்ய பயன்படுத்தப்படும் எந்திரம் ஒன்று தானாக இயங்கி தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story