அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்


அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 March 2022 1:30 AM IST (Updated: 25 March 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்
கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை அருள்வாக்கு பூ கட்டுவோர் கமிட்டி மாவட்ட அமைப்பாளர் சக்திசெல்வி அம்மன் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர் பாவேந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் கிராமப்புற பூசாரி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. 
மாத ஊக்கத்தொகை 
அனைத்து கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
அறங்காவலர் குழுவில் 
கிராம கோவில் பூசாரிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். வயது முதிா்ந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயா்த்த வேண்டும். அறங்காவலா் குழுவில் பூசாரிகளை இடம்பெறச்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட கிராம பூசாரிகள் மற்றும் பூ கட்டுவோர் கலந்து கொண்டனர்.

Next Story