அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல கட்டிடவியல் துறை சார்பில் நிலையான சூழலுக்கான கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை மீதான சவால்கள் மற்றும் நடைமுறைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதற்கு புல முதல்வர் முருகப்பன் தலைமை தாங்கினார். கட்டிடவியல் துறைத்தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக சுற்றுப்புற சூழல் மைய பேராசிரியர் கணபதி வெங்கடசுப்பிரமனியன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் தொழில்துறை வல்லுனர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இணை பேராசிரியர்கள் ஆஷா, தாமோதரன், மதியழகன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story