ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 March 2022 1:46 AM IST (Updated: 25 March 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூரமங்கலம்:-
போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போடிநாயக்கன்பட்டி ஏரி
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் போடிநாயக்கன்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியையொட்டி உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி நேற்று சேலம் மேற்கு தாசில்தார் தமிழரசி மற்றும் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல உதவி ஆணையாளர் செல்வராஜ், மேற்கு மண்டல துணை தாசில்தார் விவேகானந்தன், அழகாபுரம் வருவாய் ஆய்வாளர் ரமா ஆகியோர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் தாசில்தார் தமிழரசி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று (வெள்ளிக்கிழமை)க்குள் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றிவிட வேண்டும் என கெடு விதித்தனர்.
இதைத்தொடர்ந்து அதன் அருகே நீர்ப்பிடிப்பு வழித்தடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர். இதன் காரணமாக சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story