தந்தை திட்டியதால் பெண் தற்கொலை


தந்தை திட்டியதால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2022 1:47 AM IST (Updated: 25 March 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

பனமரத்துப்பட்டி அருகே தந்தை திட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பனமரத்துப்பட்டி:-
பனமரத்துப்பட்டி அருகே தும்பல்பட்டி கிராமம் இரட்டைபுளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 40). இவர் தனது கணவரை பிரிந்து தந்தை ஆறுமுகத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தாவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுமுகம் வசந்தாவை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த வசந்தா விஷதழையை அரைத்து குடித்துள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story