கைக்குழந்தையுடன் பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
கைக்குழந்தையுடன் பெண் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சில்லக்குடி மேத்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ரஞ்சிதா(வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ந் தேதி அரியலூரில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறி ரஞ்சிதா தனது கைக்குழந்தையுடன் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் ரஞ்சிதா கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டன் குன்னம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து ரஞ்சிதாவை குழந்தையுடன் யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story