பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்
இன்று பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் தாலுகாவில் நொச்சியம், புது நடுவலூர் கிராமங்களுக்கு நொச்சியம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் வேப்பந்தட்டை (வடக்கு, தெற்கு), வெண்பாவூர் கிராமங்களுக்கு வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகத்திலும், குன்னம் தாலுகாவில் வயலப்பாடி, கிழுமத்தூர் (வடக்கு, தெற்கு) கிராமங்களுக்கு கிழுமத்தூர் ராஜீவ் காந்தி சேவா கேந்திரியா மைய கட்டிடத்திலும், ஆலத்தூர் தாலுகாவில் இரூர், பாடாலூர் (கிழக்கு, மேற்கு) கிராமங்களுக்கு பாடாலூர் வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story