அனுமதியின்றி பதாகை; மாவீரன் மஞ்சள் படை நிர்வாகிகள் மீது வழக்கு


அனுமதியின்றி பதாகை; மாவீரன் மஞ்சள் படை நிர்வாகிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 March 2022 2:02 AM IST (Updated: 25 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி பதாகை வைத்தது தொடர்பாக மாவீரன் மஞ்சள் படை நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் அய்யனார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் சார்பில் அனுமதி இல்லாமல் பதாகை வைத்துள்ளனர். இதுதொடர்பாக அணைக்குடம் கிராம நிர்வாக அதிகாரி அனிதா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் மாவீரன் மஞ்சள் படை மாவட்ட செயலாளர் சின்னப்பன், துணை செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story