கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி `திடீர்' சாவு
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி திடீர் சாவு
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியைச் சேர்ந்தவர் ஆண்டனி அருள்ராஜ் (வயது49). இவர் சென்னைக்கு நேற்று இரவு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வள்ளியூரில் ஏறி சென்று கொண்டிருந்தார். நெல்லை அருகே வந்தபோது திடீரென ரெயில் பெட்டியில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் வந்ததும் இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உடலை கைப்பற்றி நெல்லை ரெயில் நிலையத்தில் இறக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்பெட்டி சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால் ½ மணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்றதை தொடர்ந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
Related Tags :
Next Story